Tamil News & POLLING

 

வயநாடு தொகுதியில் பிரியங்காவுக்கு எதிராக குஷ்பு போட்டி?

1 year ago 18 அக்டோபர் 2024 03:41 AM | views : 181
புதுடெல்லி:

கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குகிறார்.

அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பு களம் இறங்கவுள்ளதாக நேற்று இரவு பரபரப்பு தகவல் வெளியானது. பா.ஜ.க. உத்தேச வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக மலையாள செய்தி சேனல்களில் நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தேர்தல் என்று வந்தாலே போதும், இதுபோல வதந்திகள் பரவத்தான் செய்கின்றன. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் எழத்தான் செய்கின்றன. இப்போதும் அதுபோலவே ஒரு வதந்தி பரவுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் பா.ஜ.க. சார்பில் நான் போட்டியிட போவதாக பேசப்படுகிறது.

இதுவரை அந்த மாதிரி ஒரு தகவல் குறித்து கட்சி மேலிடம் என்னிடம் பேசவில்லை. கட்சி மேலிடம் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அந்த பொறுப்புக்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK பாமக தமிழகம் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் தீபாவளி EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கோவை அமமுக கைது கொலை சட்டசபை தேர்தல் COIMBATORE வடகிழக்கு பருவமழை SEEMAN NELLAI திருமாவளவன் TAMIL ACTRESS ஓபிஎஸ் AJITH THIRUMAVALAVAN தமிழ்நாடு நெல்லை THOOTHUKUDI விடுமுறை மதுரை தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் திருநெல்வேலி அஜித் NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் OPS SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் கொரோனா ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP MADURAI தேவர் ELECTION COMMISSION தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் வன்னியர்