Tamil News & POLLING

 

தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆதரவு

1 year ago 02 செப்டம்பர் 2024 01:02 AM | views : 164
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தாராவி மறுசீரமைப்பு திட்டம் அதானி குழுமத்தால் 3 பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை மகாராஷ்டிராவின் தாராவி மறுவடிவமைப்பு திட்டம்/ குடிசை மறுவாழ்வு ஆணையம் (டிஆர்பி/எஸ்ஆர்ஏ) மேற்பார்வையிட உள்ளது.

தாராவி குடியிருப்பாளர்களுக்கான இந்த இடமாற்ற திட்டத்தின் மூலம் 2000-ம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு முன்பாக இங்கு குடியிருப்புகளை வைத்திருப்பவர்கள் பயன்பெறுவார்கள். தற்போது தரைதளத்தில் வசித்து வரும் தாராவி மக்கள் இந்த திட்டத்தின் வாயிலாக இலவசமாக 350 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பைப் பெறுவர். 2000ஜனவரி 1 மற்றும் 2011 ஜனவரி 1-க்கு இடையில் தாராவியில் குடியேறியவர்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.2.5லட்சம் செலுத்தினால் அவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






இதுகுறித்து இந்த திட்டத்தை பார்வையிடும் மகாராஷ்டிர ஆணையத்துக்கு தொண்டு நிறுவனங்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தாராவியில் மறுமேம்பாட்டு வளர்ச்சி தொடர்பாக 2024 மார்ச் 18 அன்று தொடங்கிய கணக்கெடுப்பில் இதுவரையில் 11,000 குடியிருப்புகளுக்கு வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. தாராவியில் உள்ள மிகப் பெரிய தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் மற்றும்அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் தாராவி மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அங்கு தொடர்ந்து வணிகத்தை நடத்தவும் ஆவலுடன்இருப்பதையும் வெளிப்படுத்தி யுள்ளன. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI AMMK பாராளுமன்ற தேர்தல் ADMK AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் கனமழை CONGRESS இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் INDIAN CRICKET TEAM பாமக அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கொலை அமமுக தீபாவளி வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI கைது சட்டசபை தேர்தல் திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் SEEMAN திருநெல்வேலி NELLAI நெல்லை TAMIL ACTRESS மதுரை விடுமுறை THIRUMAVALAVAN AJITH தென்காசி கள்ளக்காதல் தமிழ்நாடு நடிகை மழை MADURAI கீர்த்தி சுரேஷ் வன்னியர் திருப்பரங்குன்றம் தேவர் OPS 2024 T20 WORLDCUP தமிழக அரசு அஜித் வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் டிரெண்டிங் ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை NORTHEAST MONSOON ELECTION COMMISSION THOOTHUKUDI