Tamil News & POLLING

 

டியூசன் எடுக்கும் போது ஏற்பட்ட நெருக்கம்.. பிளஸ் 2 மாணவனுடன் அறையெடுத்து தங்கிய ஆசிரியை!

1 year ago 25 ஜூன் 2024 07:43 AM | views : 149
வீட்டுப்பாடம் எழுத உதவியதில் நெருக்கம்... பிளஸ்-2 மாணவனுடன் அறை எடுத்து தங்கிய ஆசிரியை


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இந்தநிலையில் திடீரென அந்த மாணவர் மாயமானார். இதுகுறித்து மாணவரின் தந்தை ஆவியூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

அந்த மாணவர் படித்த பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணியாற்றியவர் பாத்திமாகனி (வயது40). இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கும், அந்த மாணவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பாத்திமா கனிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த மாணவன் பிளஸ்-2 படித்தபோது, வீட்டு பாடங்களை சரிவர எழுதி வராமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடங்கள் எழுத பாத்திமா கனி உதவியுள்ளார். இது அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பள்ளி நிர்வாகம், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மற்றொரு பள்ளிக்கு, பாத்திமாகனி மாற்றப்பட்டார். ஆனால், அவர் அந்த பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மாணவனும், ஆசிரியையும் புதுச்சேரிக்கு சென்றனர். அவர்கள் அங்கிருப்பதை அறிந்த போலீசார், புதுச்சேரி சென்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 நாட்களாக புதுச்சேரி பகுதியில் ஆசிரியை பாத்திமாகனியும், மாணவனும் அறை எடுத்து தங்கி இருந்ததும், மாணவனை கல்லூரியில் சேர்க்க முயன்றதும் தெரியவந்தது. ஆசிரியை பாத்திமாகனியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN ADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் AIADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் இந்திய அணி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை சீமான் CONGRESS PMK தமிழகம் பாமக PARLIAMENT ELECTION கைது பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் SEEMAN தீபாவளி COIMBATORE KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை கொலை EDAPPADI PALANISWAMI அமமுக கோவை சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN AJITH நெல்லை கள்ளக்காதல் திருநெல்வேலி மதுரை விடுமுறை திருமாவளவன் தென்காசி ஓபிஎஸ் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM THOOTHUKUDI TAMIL ACTRESS தேவர் கீர்த்தி சுரேஷ் அஜித் கொரோனா தமிழக அரசு வன்னியர் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் வானிலை ஆய்வு மையம் திருப்பரங்குன்றம் OPS டாப் நியூஸ் ELECTION COMMISSION டிரெண்டிங் 2024 T20 WORLDCUP MADURAI ASSEMBLY ELECTIONS SENGOTTAIYAN