தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

மனைவி , மகனுடன் வாழ்வதே உண்மையான பாசம்: தாராபுரத்தில் இபிஎஸ் பேச்சு

தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதல்வர் வாய்கிழிய பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாகியிருக்கும் அவலம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்தும் இன்றைய முதல்வர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்?

“அண்ணன், தாய் மாமன்” என்று தனக்கு Branding செய்துகொள்ளும் இந்த நடிப்பு முதல்வர், பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய்மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா?

ஆட்சி என்பது கவர்ச்சியான வார்த்தைகளால் நடத்துவது அல்ல- ஆட்சி என்பது செயல்!

மதுராந்தகத்தில் மீண்டும் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கால் வைக்கப் போகும் முதல்வர், இது போன்ற கொடூர சம்பவங்களுக்கான விளக்கத்தை அளிப்பாரா? அல்லது, வழக்கம்போல பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் சுழற்றுவது மட்டும் தானா?

Reels Content-காக மட்டுமே ஆட்சியை நடத்தி, Real Action- ல் எதுவும் இல்லாத, தமிழகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் Compromise செய்துள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

பாசம் என்று சொன்னால்... தாய், தந்தையுடன் வாழ வேண்டும், கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும்.

மேடைகளில் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது. நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel