மஹிந்திரா XUV 3XO புது வேரியண்ட் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம், புதிய ரெவ்-எக்ஸ் எட்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மாடல் XUV 3XO RevX Edge என அழைக்கப்படுகிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 9.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனம் RevX Edge (O) மாடலையும், RevX M (O) மாடலின் புதிய பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய மஹிந்திரா XUV 3XO RevX Edge மாடலில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதே சமயம், 1.5-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் மாடலில் மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த புதிய வேரியன்ட்கள் எவரெஸ்ட் ஒயிட், ஸ்டெல்த் பிளாக், டாங்கோ ரெட், நெபுலா புளூ மற்றும் கேலக்ஸி கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன.
RevX Edge மாடலில் டூயல்-டோன் ரூஃப், பாடி-கலர் கிரில், கருப்பு வீல் கவர்கள், எல்.இ.டி. சிக்னேச்சர் லேம்ப்கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில், கருப்பு லெதரெட் இருக்கைகள், பின்புற ஏசி வென்ட்கள், கப் ஹோல்டர்களுடன் கூடிய பின்புற ஆர்ம்ரெஸ்ட் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்டு ஆப்பிள் கார்பிளே வசதியுடன் கூடிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.
இவைதவிர குரூயிஸ் கண்ட்ரோல், ரியர்-வியூ கேமரா, ஓட்டுநர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதியுடன் ORVM-கள் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக், ESC, ISOFIX மவுண்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிமைன்டர்களுடன் கூடிய 3-பாயிண்ட் சீட் பெல்ட் ஆகியவை அடங்கும்.
மஹிந்திரா XUV 3XO RevX Edge பெட்ரோல்-மேனுவல் மாடலின் விலை ரூ. 9.39 லட்சமாகவும், பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல்-மேனுவல் மாடல்களின் விலை ரூ. 10.59 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. RevX Edge (O) மாடலின் விலை ரூ. 9.89 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, இதன் அதிகபட்ச விலை ரூ. 11.91 லட்சமாகும். புதிய பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் RevX M(O) மாடலின் விலை ரூ. 9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel