தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

4 வயதில் சர்வதேச செஸ் தரவரிசையில் இடம்பிடித்து உலகளவில் இளம் வீராங்கனையாக சாதனை படைத்த ஒடிசா சிறுமி!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செப்டம்பர் மாத உலகளாவிய தரவரிசைப் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா மிஷ்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 16 நாட்கள் மட்டுமே வயதான இவர், FIDE சர்வதேச அமைப்பில் அதிகாரப்பூர்வ தரவரிசையைப் பெற்ற மிக இளம் செஸ் வீராங்கனை என்ற பெருமையை அடைந்துள்ளார்.

புவனேஸ்வரில் அமைந்துள்ள மதர்ஸ் பப்ளிக் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற ‘ஒடிசா மாநில பிளிட்ஸ் FIDE ரேட்டிங் திறந்தவெளி செஸ் சாம்பியன்ஷிப்’ தொடரில் பங்கேற்ற அவர், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 1,432 புள்ளிகளைப் பெற்றார். 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெண் வீராங்கனைகளில், தற்போது FIDE சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இளம் வீராங்கனை இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இவர் நடப்பாண்டில் நடைபெற்ற 7 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்று சிறுமிகள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். மிகக் குறைந்த வயதிலேயே அக்ரஸீவ் செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்ட எலெனாவின் இச்சாதனையை ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

ஒட்டுமொத்தப் பிரிவில் (ஆண்/பெண்) மிகச் சிறிய வயதில் FIDE தரவரிசை பெற்ற உலக சாதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா பெயரில் உள்ளது. அவர் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது 3 வயது 7 மாதம் 20 நாட்களில் FIDE தரவரிசையைப் பெற்று இச்சாதனையைப் படைத்திருந்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel