தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம்- தீபாவளி பண்டிகை ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்

சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது.

60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை தற்போது இருப்பதால் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.

நவம்பர் 5-ந்தேதி பயணம் செய்ய நாளை முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 6-ந் தேதி பயணம் செய்வதற்கு 7-ந்தேதி (திங்கட்கிழமை)யும் 7ந்தேதி பயணத்திற்கு 8-ந்தேதியும் முன்பதிவு நடைபெற உள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப வருகிற 10-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர். இது தவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.

ரெயில்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel