தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல், வணிக கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.

இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பெரிதும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel