தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம் - அதிரவைக்கும் வீடியோக்கள்

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது. சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.

லடாக்கில் இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்து பாதையை அடைத்தால் அணை உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி நேபாளத்தின் புகுந்ததே வெள்ளபெருகுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளவதில் நேபாளத்தில் பல வீடுகள், மனிதர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு வீடு மட்டும் தனித்து நின்றதும் அதன் மாடியில் நின்று அதை வேடிக்கை பார்த்த குடும்பத்தினரின் வீடியோவும் வைரலாகி வருகிறது.

சுற்றியிருந்த அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட அவர்கள் மட்டும் அதியசயமாக உயிர்தப்பியது குறித்து பலரும் இணையத்தில் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.

கரைபுரண்டு ஓடும் சேற்று வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் இடிபாடுகளையும் அடித்துச் செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது.

இருப்பினும், சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.

வெள்ள நீர் சூழ்ந்தபோது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது மூன்று பேர் அந்த வீட்டில் இருப்பது காண முடிந்தது.

அருகில் இருந்த கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த கட்டிடம் மிகக் குறைந்த சேதத்தையே சந்தித்ததாக தெரிகிறது.

அதேவேளையில், அந்த வீட்டில் காணப்பட்ட குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்தும் கவலை எழுந்தது.

பின்னர் மற்றொரு சமூக வலைதளப் பயனர் அந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வீடியோவை பகிர்ந்தார்.

மற்றொரு சம்பவடத்தில் மலைப் பகுதியில் மாட்டிக்கொண்ட பெண் ஒருவரை ராணுவப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

வெள்ளத்தில் அவரின் வீடு, குடும்ப உறுப்பினர்கள் உட்படத் தனது அனைத்து உடைமைகளும் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கதறினார்.

உயிர்தப்பிய போதிலும், அவர் மீளமுடியாத அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்ததை வீடியோவில் காணமுடிந்தது.

இந்தச் வீடியோ காட்சி தற்போதைய கள நிலவரத்தின் பயங்கரத்தை பிரதிபலிக்கின்றன.

இவரைப் போலவே இன்னும் ஏராளமானோர் உதவிக்காக காத்திருந்தபடி மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சிக்கியிருக்கலாம் எனப் கவலை எழுந்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், தொலைதூரப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து அச்சம் நிலவுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel