தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

200 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது ஏத்தர் ஸ்கூட்டர் - விலை மற்றும் முழு விவரங்கள்

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஏத்தர் கோனார்க் மாடலின் விலை ரூ. 99,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, நிறுவனத்தின் புதிய EL பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்கூட்டர் ஆகும்.

இந்த EL கட்டமைப்பு, வெறும் செயல்திறனை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், குறைந்த செலவுகள், எளிமையான பராமரிப்பு, சுலபமான சார்ஜிங் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை ஆகியவற்றை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஏத்தர் கோனார்க் S மற்றும் Z ஆகிய இரண்டு லைன்களில் பலவிதமான ரேஞ்ச் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். அறிமுக விழாவில் பகிரப்பட்ட வேரியன்ட் விலைகளின்படி, 100 கிலோமீட்டர் IDC ரேஞ்ச் கொண்ட கோனார்க் S மாடலின் விலை ரூ. 99,999 ஆகும். இதேபோல் 125 கிலோமீட்டர் வேரியண்ட்டின் விலை ரூ. 1,21,999 ஆகவும், 161 கிலோமீட்டர் வேரியண்ட் விலை ரூ. 1,44,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

200 கிலோமீட்டர் S மாடல் மற்றும் இரண்டு கோனார்க் Z வேரியன்ட்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். S மாடல் ஐந்து வண்ணங்களிலும், Z மாடல் நான்கு வண்ணங்களிலும் கிடைக்கும்.

ஏத்தர் கோனார்க் மாடலில் 14-இன்ச் முன்பக்க சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (CBS) கொண்ட முன்பக்க டிஸ்க் பிரேக் பயன்படுத்துகிறது. ஆனால், ஏத்தர் நிறுவனம், ஏஇபிஎஸ் (AeBS) எனப்படும் மேம்பட்ட மின்னணு பிரேக்கிங் சிஸ்டம் மூலம் அதை மேம்படுத்தியுள்ளது.

ஏஇபிஎஸ், கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதோடு, 20% வரை அதிகபட்ச பிரேக்கிங் விசையை வழங்க முடியும் என்று ஏத்தர் கூறுகிறது.

EL பிளாட்ஃபார்ம் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​நிறுத்தும் தூரத்தைக் குறைக்கவும், பின் சக்கரம் லாக் ஆவதைக் குறைக்கவும் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.

புதிய ஏத்தர் கோனார்க் மாடலில் ஆட்டோஹோல்டு, ஃபால்சேஃப், ஏர்வாக், ப்ளூடூத் கால் மற்றும் மியூசிக் அலர்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. இத்துடன் ஏத்தர் கனெக்ட், தெஃப்ட் அண்ட் டோ அலெர்ட்கள், ஃபைண்ட் மை ஸ்கூட்டர் மற்றும் ஓ.டி.ஏ. அப்டேட் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 31-லிட்டர் அன்டர்சீட் ஸ்டோரேஜ் மற்றும் யு.எஸ்.பி. சி சார்ஜர் வழங்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel