2வது டெஸ்டில் இந்தியா நிதான ஆட்டம்: அரை சதம் கடந்த படிக்கல், சுப்மன் கில்
இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் படிக்கல், சுப்மன் கில் அரை சதம் கடந்தனர்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரண்ஷ் ஜெயின் அறிமுகம் ஆகிறார்.
அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல்18 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 66 ஆக இருந்தது.
3வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல் - சுப்மன் கில் ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்களைக் கடந்தது.
முதலில் படிக்கல் அரை சதம் கடந்தார். அவரை தொடர்ந்து சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.
அப்போது இந்திய அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 183 ரன்களை எடுத்திருந்தது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel