உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, வேல்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் டி பிரிவில் இடம்பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 15-ம் தேதி வேல்ஸ் அணியுடனும், ஆகஸ்ட் 17-ம் தேதி இங்கிலாந்து அணியுடனும், ஆகஸ்ட் 19-ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.
இந்நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்கள் அணி விவரம் வருமாறு:
கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா
டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய் சுமித், யஷ்தீப் சிவாச்
மிடில் பீல்டர்கள்: ரஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லலாகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்
முன்கள வீரர்கள்: தில்பிரீத் சிங், ஷீலானந்த் லக்ரா, ஷுக்தீக் சிங், மன்தீப் சிங், அபிஷேக்
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 1975-ல் தங்கமும், 1973-ல் வெள்ளியும், 1971-ல் வெண்கலமும் இந்தியா வென்றது. அதன்பின், இந்திய அணி எந்த பதக்கத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.