ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி பரிபஹன் பவன்-IIல் இருந்து 50 ஏ.சி. பேருந்தகள் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கொல்கத்தாவில் வாட்டர் மெட்ரோவை அறிமுகம் செய்யும் திட்டமிட்டுள்ளது. மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவையை இணைக்கும் திட்டமும் உள்ளது. மின்சார பேருந்துகளுக்கு சார்ஜிங் ஏற்றும் சார்ஜிங் நிலையங்கள், கல்யாணியின் க்ரீன்பீல்டு விமான நிலையம் போன்ற திட்டங்களும் அரசிடம் உள்ளது என்றார்.

நாம் ஐரோப்பியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள நகரங்களுக்கு விமான போக்குவரத்தை தொடர்பை கொண்டிருந்தோம். முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், பெரும்பாலான நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளன. லண்டன் உள்பட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களுக்கு கொல்கத்தாவில் இருந்து விமான சேவை இல்லை.

கொல்கத்தா அருகே 2-வது விமான நிலையத்திற்கான முன்மொழிவையும் முன்னெடுக்கவில்லை. கொல்கத்தா அருகே மற்றொரு விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, நிலம் கேட்டு கடிதம் எழுந்தியிருந்தார். பங்கர் பகுதியில் இருந்து நிலத்தை கையகப்படுத்த முடியாது என்று முந்தைய மம்தா அரசு கடிதம் எழுதியது. அது பலவீனமான அரசு.

மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகள் மாநிலத்தை கடனில் ஆழ்த்தியுள்ளன.சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் சுமையை தற்போதைய அரசு மீது சுமத்தியுள்ளனர்.

சிறந்த வருவாயை கொண்டு வருவதற்கான முக்கியம்சமாக போக்குவரத்துத்துறை இருக்க முடியும். கடனில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும். 8 லட்சம் ரூபாய் கடன் மாநில அரசு மீது உள்ளது.

ஒரு மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு நவீனமாக இருக்கும்போது, ​​அதன் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைப் பெற முடியும். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டால், அதிகமான தொழில்முனைவோர்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்வார்கள். இதன் விளைவாக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிஎன்ஜி (CNG) மற்றும் மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்... 60:40 என்ற நிதிப் பகிர்வு முறையின் கீழ், மத்திய அரசின் உதவியுடன் கூடுதல் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel