Tamil News & polling
புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இதன்படி, மருத்துவ படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள மாணவ மாணவியர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 23 லட்சத்து 81 ஆயிரத்து 333 -பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress