Tamil News & polling
சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், "சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் ஒருவேளை என்னை கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.
அண்மையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சிகள் உறுப்பினர் ஆவதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேரலாம் என்று விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என சுருக்கமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் TVK என அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது கட்சியை TVK என அழைக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு எப்படி TVK என அழைக்கலாம் என தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress