ரவீந்தர் கௌஷிக் என்ற வீரனை எத்தனை பேருக்குத் தெரியும்..??

ரவீந்தர் கௌஷிக் என்ற வீரனை எத்தனை  பேருக்குத் தெரியும்..??

  ஏப்ரல் 16, 2023 | 03:47 pm  |   views : 1832


இந்த வீரனை எத்தனை பேருக்குத் தெரியும்..??



ரவீந்தர் கௌஷிக்.. ( RAW )



இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை என்றே சொல்லலாம்..



நாடகங்களில் நடித்துகொண்டு இருந்த மனிதரை, அவருடைய திறமையை அடையாளம் கண்டு பிடித்து உளவுத்துறைக்கு கொண்டு வந்தது ரிசர்ச் அனலிசிஸ் விங் என்று சொல்லப்படும் ரா.....1975 ல் இவர் ரா வில் சேர்ந்தார்.... இந்திய உளவுத்துறை கண்டு எடுத்த தலை சிறந்த உளவாளி...பாகிஸ்தான் ரானுவதிற்குள்ளேயே புகுந்து ஒரு முக்கிய பதவியும் அடைந்த மாமனிதர்..



Also read...  ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!


இன்றும் இவரை பற்றி ரா வில் சேர விரும்பும் உளவாளிகள், இவருடைய அபரிமிதமான சாகசங்களை கேட்டு மெய் சிலிர்ப்பது நிஜம்.



தன்னுடைய 23 வது வயதில் ரா வினால் தேர்வு செய்யப்பட்டு, தெள்ள தெளிவாக உருது பாஷையை கற்றுக்கொண்டு, குரானை புரட்டி படித்து, சுன்னத் செய்து கொண்டு ரவீந்தர் கௌஷிக் என்கிற நபி அஹெமத் பெயருடன் ஒரு முழு இஸ்லாமியனாகவே மாறி,



பாகிஸ்தானில் உள்ள இண்டு இடுக்கு எல்லாம் மனப்பாடம் செய்து, பாகிஸ்தானில் நுழைந்தார்.. இவர் இந்தியன் என்று சம்பந்தப்பட்ட அத்துணை ரகார்டுகளும் இங்கு இந்தியாவில் அழிக்கப்பட்டது.. ஒரு வேளை இந்த உளவாளிகள் மாட்டிகொண்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் கையை விரித்து விடும்.. இது உலகம் முழுதும் கடைபிடிக்க படும் நடவடிக்கை..



1975ல் பாகிஸ்தானில் சட்டக் கல்லூரியில் பட்டம் படிக்க அடியெடுத்து வைத்த இந்த மனிதருக்கு ராணுவத்தில் சேர அருமையான அடிகோலாக அமைந்தது..



பாகிஸ்தானில் ராணுவத்தில் சேர்ந்த கொஞ்ச வருடங்களிலேயே மேஜர் பதவிக்கு வந்தார் என்றால் இந்த மனிதரின் அசாத்திய துணிச்சல் மற்றும் அறிவை என்னவென்று சொல்லி வியப்பது..?அமானத் என்கிற இஸ்லாமிய பெண்ணை திருமணமும் செய்து இஸ்லாத்தையும் தழுவி, ஒரு நிஜ பாகிஸ்தானியாகவே மாறி விட்டார்..



1975 முதல் 1983 வரை இந்திய ராணுவத்திற்கு தேவைப்பட்ட அத்துணை ரகசியங்களும் இவரால் பரிமாறப்பட்டன..அவை எல்லாம் கிடைத்த காரணத்தால் எண்ணில் அடங்காத நாசகார பாகிஸ்தானின் முயற்சிகள் இந்திய ராணுவத்தினரால் தடுக்கப்பட்டன..இவரின் அபார திறமையை கண்டு ராணுவத்தினர் மட்டும் என்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் மெய்சிலிர்த்தார். அவருக்கு இந்திரா காந்தி BLACK TIGER என்கிற பட்ட பெயரும் சூட்டினார்...



இதற்கு நடுவில் இந்திய உளவு துறை அடுத்து இன்யத் மைஷா என்கிற ஒருவரை அதே பாகிஸ்தானுக்கு 1983ல் அனுப்பியது.. எப்படியோ தன்னுடைய ராணுவத்தில் ஒரு உளவாளி வந்துவிட்டதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான், இந்த மனிதரை பிடித்து விட்டது.. சும்மா விடுமா..



யார் உள்ளே புகுந்தார் என்று தெரிந்து கொள்ள இவரை சித்திரவதை செய்து விஷயத்தை கறக்க என்னன்னவோ செய்தது..கடைசியில் தெரிந்தும் கொண்டது..



இது நாள் வரை யார் ராணுவ மேஜர் ஆக இருந்தாரோ இவர் ஒரு இந்திய உளவுத்துறையின் ஆள் என்று தெரிந்த பாகிஸ்தான் ராணுவம் திகில் அடைந்து, அவரை 2 வருடங்கள் சித்திரவதை செய்து, பின்னர் சிறையில் அடைத்து, அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவு செய்தது..



இது நடந்த வருடம், 1985... ஆனால் கடைசியில் அவருடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தால் மாற்றப்பட்டது.



கௌஷிக் கிட்டத்தட்ட 16 வருடங்கள் தன்னுடைய தாய் நாட்டிற்காக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.. மிகவும் மோசமான அந்த சிறை வாசத்தால் அவருக்கு TB , ஆஸ்துமா வியாதிகள் தொற்றிக்கொண்டன..



கடைசியில் மீளவே முடியாமல் வீர மரணத்தை முல்தானில் உள்ள மத்திய சிறையில் அடைந்தார்.. அங்கேயே அவரை புதைக்கவும் செய்தனர்..



இந்திய உளவுத்துறை இவரை போன்ற ஒரு மாவீரனை இன்று வரை கண்டெடுக்க வில்லை.. எந்த வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் தேசத்துக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணம் செய்த இவரை நினைத்து இன்றும் ரா அமைப்பினர் பெருமை படுவர்..



இவரை போன்றவர்கள் பொது மக்களால் அறியப்படுவது இல்லை.. முடியவும் முடியாது.. உளவின் சிறப்பே தன்னை யாரும் அறியக்கூடாது என்பது தான்..



போற்றுதலுக்கு உரிய இந்த மனிதரை வணங்குவதில் பெருமையடைவோம்..!



ஜெய் இந்துஸ்தான்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 3 days ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 3 days ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 4 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 5 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 5 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 5 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 5 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 5 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்