Tamil News & polling
தூத்துக்குடி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அவரிடம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கனிமொழி எம்.பி. கூறும்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக தி.மு.க.வினர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் என்றார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress