Tamil News & polling
மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தனது 234-வது படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆச்சரிய அறிவிப்பு வெளியானது. இரண்டு லெஜெண்டுகள் மீண்டும் இணையும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'KH 234' என்று பெயரிடப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகர் இருவரும் தங்களது முந்தைய கமிட்மென்ட்களில் பிஸியாக இருப்பதால் 'KH 234' படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதாமாகும். இதற்கிடையில், நடிகர்கள் மற்றும் குழுவினரை இறுதி செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.
'கேஎச் 234' படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால் 'மன்மதன் அம்பு' மற்றும் 'தூங்காவனம்' ஆகியப் படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுவதால், த்ரிஷாவின் கெரியர் மீண்டும் உயரத்துக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையே கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படம் 2023 ஆயுதபூஜைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கமல்ஹாசன் இணையவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இறுதி வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம், ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress