INDIAN 7

Tamil News & polling

ஒரு குடுமபத்தில் கணவன் மனைவி சேர்மன்! கண்டுகொள்ளாத ஸ்டாலின்!

22 அக்டோபர் 2021 06:03 AM | views : 70
Nature

இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவராக இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவி J.சௌமியா ஜெகதீஷ் இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் என்ன கொடுமை என்னவென்றால் சௌமியா ஜெகதீஷ் அவர்கள் வேட்புமனு மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்குமே வெளியில் தலைகாட்டவே இல்லை. இப்படிப்பட்ட நபருக்கு செர்மன் பதவி வழங்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் VSR.ஜெகதீஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர் என்பதால் காலம் காலமாக திமுகவில் இருப்பவர்கள் நிலைமை மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.

VSR.ஜெகதீஷ் பெற்ற இந்த வெற்றி சபாநாயகர் திரு அப்பாவு அவர்களின் ஆதரவுடன், திமுக நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அவர்களை எதிர்த்து பணபலத்துடன் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி பெற்ற வெற்றி என்பதால் நெல்லை மாவட்ட திமுகவில் பெரும் சலசலப்பு உருவாகி உள்ளது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் திமுக தலைமைக்கு வேறு நபர்களின் பெயரை பரிந்துரை செய்த பின்பும் தலைமை அதனை கண்டுகொள்ளவில்லை.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,

Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்