Tamil News & POLLING

 

அமமுக வேட்பாளர்களுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

2 hours ago 28 மார்ச் 2026 02:47 PM | views : 17

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.


இந்த நிலையில், அமமுக வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தனர். இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்றைய தினம் சென்னையில், என்.டி.ஏ கூட்டணியின் தோழமைக்கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்து உரையாடினர்.


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வெற்றி வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்புகளை புறக்கணித்துள்ள இந்த விடியா திமுக ஆட்சியை அகற்றி, நம் என்.டி.ஏ கூட்டணியின் ஆட்சியை நிறுவ அனைவரும் ஒற்றுமையுடனும் அயராத உழைப்புடனும் செயல்பட வேண்டுமென உற்சாகப்படுத்தினேன்.


இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK TAMIL NADU ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் PMK பாமக அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை கோவை முக ஸ்டாலின் CONGRESS காங்கிரஸ் EDAPPADI PALANISWAMI கைது COIMBATORE தமிழ்நாடு சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN இந்திய அணி சீமான் கொலை INDIAN CRICKET TEAM வடகிழக்கு பருவமழை தீபாவளி பிரதமர் மோடி KEERTHY SURESH AJITH அமமுக PARLIAMENT ELECTION ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS NELLAI விடுமுறை திருமாவளவன் நெல்லை தென்காசி வன்னியர் தேவர் நடிகை திருப்பரங்குன்றம் திருநெல்வேலி PRIME MINISTER MODI டாப் நியூஸ் கள்ளக்காதல் கொரோனா SEEMAN THIRUMAVALAVAN பாலியல் தொல்லை டிரெண்டிங் RAJINIKANTH ஓபிஎஸ் NORTHEAST MONSOON OPS மதுரை MADURAI SURIYA அஜித் TAMIL CINEMA CSK கீர்த்தி சுரேஷ்