INDIAN 7

Tamil News & polling

தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் - நடிகை கஸ்தூரி

08 டிசம்பர் 2024 09:59 AM | views : 79
Nature

திருச்சி,

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கஸ்தூரியிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன். இதை பேசியதற்காகவே விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமே.." என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து திருமாவளவன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா மற்றும் திருமாவளவன் வி.சி.க.வில் இனி ஒன்றாக இருப்பார்களா என்பது தெரியவில்லை" என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "உதயநிதி சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். அவர் தனது ரெட் ஜெயண்ட் பற்றி சொல்கிறாரோ என்று நினைத்தேன். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லை. இன்று விஜயையும், ஆதவ் அர்ஜுனாவையும் கூறியுள்ளார். ஏற்கனவே சனாதனத்தை பற்றி விமர்சனம் செய்தார். ரஜினி குறித்து விமர்சனம் செய்தார். திரும்பத் திரும்ப அவர் அப்படி தான் பேசுகிறார்" என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், " எப்போதுமே உதய சூரியனுக்கு எதிர் ரெட்டை இலைதான் என கடந்த 60 ஆண்டுகளாகமாய் இருந்து வருகிறது. விஜய்யை பயன்படுத்தி அ.தி.மு.க.வின் உண்மையான வீச்சையும் அவர்களின் முகத்தையும் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம். ஒரு கட்சியின் கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனி தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும். வெள்ளத்தில் தண்ணீர் வடிந்ததற்கு காரணம் மின்மோட்டார் கொண்டு தண்ணீரை உறிஞ்சியதுதான். தானாக தண்ணீர் வடியவில்லை. விஜய், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை உசுப்பேத்திவிட்டு தி.மு.க. பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை, தி.மு.க.வை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒரே ஆசை தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். அதை தி.மு.க.வை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் - நடிகை கஸ்தூரி1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என

Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்