INDIAN 7

Tamil News & polling

புதிய டிவி சேனலை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்!

03 நவம்பர் 2024 12:11 AM | views : 70
Nature

சென்னை:

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.

மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார்.

அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய டிவி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்