POLLING FLAMES

 

ரஜினியால் உதயநிதிக்கு உறுதியான துணை முதல்வர் பதவி…? கடும் அதிருப்தியில் துரைமுருகன்…!!

1 year ago 27 ஆகஸ்ட் 2024 03:33 AM | views : 243
முதல்வர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்பட்டு சொல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் இந்தப்பயணத்தை மேற்கொள்வதாகக் கூறப்பட்டாலும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காகவே, அவர்வெளிநாடு செல்ல இருப்பதாக ஆங்காங்கே பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. அது ஒருபுறம் இருக்க, அவர்வெளிநாடு செல்லும் சமயத்தை பயன்படுத்தி, முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதிக்கு மணிமகுடம் சூட திமுக தீவிரம் காட்டி வருகிறது.

திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்று கட்சியினரால் பார்க்கப்படுவதால், இளம் அமைச்சர்கள்மற்றும் ஒரு சில சீனியர்கள் வரை திமுகவின் முக்கிய நிர்வாகிகள், உதயநிதியின் விசிறிகளாக இருப்பதாகசொல்லப்படுகிறது. எனவே, அவரை துணை முதல்வராக்குவதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், எம்.ஜிஆர்., கருணாநிதி காலத்தில் இருந்து அரசியல் செய்து வரும் பழுத்த தலைவரானதுரைமுருகன், தனக்கு அந்த துணை முதல்வர் பதவி கிடைக்காதா..? என்று ஏங்குவது அண்மை காலங்களில்அவர் கொடுத்த பேட்டிகளில் தெள்ளத் தெளிவாக தெரிந்த ஒன்று தான். திமுக அமைச்சர்கள் எல்லாம் துணைமுதல்வராக உதயநிதியை முன்னிறுத்தி வரும் நிலையில், துரைமுருகன் அப்படி ஒரு முறை கூடசொல்லவில்லை. மாறாக, துணை முதல்வர் பதவி கொடுத்தால் யாரு தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள், எனக் கூறி, உதயநிதியின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் தான், அமைச்சர் எவ வேலு எழுதிய கலைஞர் ஒரு தாய் எனும் புத்தக வெளியீட்டு விழாவில்நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி, திமுகவில் மோதலை உண்டாக்கியுள்ளது.

துரைமுருகனை ஓல்டு ஸ்டுடண்ட் எனக் குறிப்பிட்டு பேசிய ரஜினி, அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம்னுசொல்வார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றுகூறுகிறாரா? என ஒன்றும் புரியாது. இதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன்" என்றுகூறினார். அவரது பேச்சைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின் விழுந்து விழுந்து சிரித்தார்.

மறுபுறம், மூத்த தலைவரான தன்னை மேடையின் கீழே அமர வைத்து விட்ட கடுப்பில் இருந்த துரைமுருகனின்முகம் சிவந்தே போனது என்று கூறலாம். பின்னர், ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அமைச்சர்துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பல்லு விழுந்தபிறகும்நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று தனதுஅதிருப்தியை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
அதேவேளையில், ரஜினியின் பேச்சை கெட்டியாக பிடித்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர்பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்பது போல, மேடையிலேயே மறைமுகமாகவே துரைமுருகனிடம் கேட்டுவிட்டார்.

இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக இருப்பதாகவும், நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்துவழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று துரைமுருகனை பார்த்து வெளிப்படையாககூறினார். மேலும், நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல்எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று கூறிய உதயநிதி, நான் அதை சொன்னால்மனதில் வைத்துக் கொண்டு பேசிகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள், என புன்னகைத்தபடி சொல்லிமுடித்து விட்டார். இதனால், துணை முதல்வர் விவகாரம் திமுகவில் சூடுபிடித்துள்ளது.

திமுகவில் இந்த முட்டல்கள், மோதல்கள் நீடித்து வந்த நிலையில், அண்ணாமலையும் தன் பங்கிற்கு கருத்தைதெரிவித்துள்ளார். அதாவது, துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கொடுக்கும் போது, திமுகவில் மோதல்வெடிக்கும் என்பதை உணர்ந்தே ரஜினி இப்படி பேசியதாக கூறியது, இந்த விவகாரத்தில் மேலும்சாம்பிராணியை போட்டது போல அமைந்து விட்டது.

பொதுவாக, துருவி துருவி கேட்டாலும், அரசியல் பேச்சுக்களை தவிர்க்கும் ரஜினிகாந்த், இந்த நிகழ்வில்இப்படி பேசுவதற்கான காரணம் என்ன..? உதயநிதி தரப்பில் இருந்து அவரை இப்படி பேசச் செய்தார்களா..? என்று எல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஒருபுறம் சீனியர் அமைச்சர் துரைமுருகன், மறுபுறம் மகன் உதயநிதி என பனிப்போர் என, நிலவி வரும்நிலையில், அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலைமை திமுகவுக்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் முதல்வர்ஸ்டாலினிடம் எழுந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், ரஜினிக்கு எதிராக அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சுக்கு திமுக தலைமை அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரஜினி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன், நகைச்சுவையாய் பேசியதை பகைச்சுவையாய் ஆக்கிவிட்டதாக கூறி சமாளித்தார்.

ஆனால், ரஜினி பொத்தாம் பொதுவாக கருத்து கூறினாரா..? அல்லது திமுகவில் நிலவி வரும் பதவி மோதல் குறித்து திட்டமிட்டே சொன்னாரா..? என்று தெரியாத நிலையில், அவரது பேச்சு திமுகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக முக ஸ்டாலின் கோவை CONGRESS PARLIAMENT ELECTION COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM கைது தமிழ்நாடு KEERTHY SURESH தேவர் அமமுக சீமான் OPS பிரதமர் மோடி வன்னியர் சூர்யா நெல்லை TAMIL ACTRESS THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் SURIYA NELLAI தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL AJITH CSK கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் அஜித் தென்காசி விடுமுறை பாலியல் தொல்லை தீபாவளி அன்புமணி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH மதுரை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி ELECTION COMMISSION