Tamil News & polling
நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல. 2 கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தங்கள் கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
தி.மு.க.வில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.எனவே, இரண்டுக்கும் 10 சதவீதம்தான் வித்தி யாசம். விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சியின் தொடக்க விழாவுக்கு, மற்றவர்களை அழைக்க மாட்டார்.நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று நான் முடிவெடுத்து இருக்கிறேன்.
ஆனால், தேர்தல் காலத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கூட்டணி குறித்து யோசிப்பேன்.2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 50 தொகுதி களில் வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்து உள்ளேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து இதுவரை நான் தெரிவிக்கவில்லை. இவ்வாறூ அவர் கூறினார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress