Tamil News & polling
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, சிவம் துபே 27, ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த தென்னாபிரிக்கா முடிந்த அளவுக்கு போராடியும் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டீ காக் 39, கிளாஸின் 52 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
விராட் கோலி ஓய்வு:
அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்து சரித்திரம் படைத்தது. இந்த வெற்றிக்கு 76 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவே என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. இதையே நான் சாதிக்க விரும்பினேன். ஒரு நாள் உங்களால் எதுவும் முடியாது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அது நடக்கும். கடவுள் இஸ் கிரேட். இந்த தருணத்தில் எப்போதும் இருந்ததில்லை. இதுவே இந்தியாவுக்காக நான் விளையாடிய கடைசி டி20 போட்டி. நாங்கள் உலகக் கோப்பையை தூக்க விரும்பினோம்”
“இதை வெளிப்படையான ரகசியமாக வைத்திருக்க விரும்பினேன். ஒருவேளை தோல்வியை சந்தித்து இருந்தால் கூட இதை நான் சொல்லியிருக்க மாட்டேன். ஏனெனில் இது டி20 கிரிக்கெட்டில் வருங்கால தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமாகும். ஐசிசி தொடரில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம்”
“ரோகித் சர்மாவை பாருங்கள். வெற்றிக்காக அவர் ஒன்பது டி20 உலகக் கோப்பைகள் காத்திருந்தார். அவர் தான் இதற்கு முழுமையாக தகுதியானவர். எங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த நாளுக்காக மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் தன்னுடைய கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress