தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்: ம.பி. முதல்வர் சாடல்

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி Chhatron ki Goonj என்ற பெயரில் நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் நேற்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாணவர்களை சந்தித்தார்.

அமித் ஷா மகன் எப்படி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்கிறார். மற்றொரு மாணவர் இந்தியாவின் ஒட்டுமொத்த வணிகச் சூழலையும் இரண்டு தனிநபர்கள் எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என்று ஒரு மாணவர் கேட்கிறார். மேலும், நீதித்துறை மற்றும் மற்ற அமைப்புகள், அவர்களுடைய வேலையை செய்வதில் ஏன் தோல்வியடைந்து விட்டன அல்லது தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை என்று கேள்வி கேட்கின்றனர்.

அதனால்தான் இந்த அமைப்புக்கு மாணவர்கள் தேவையில்லை. அதற்குத் தேவை குருட்டு விசுவாசிகள். ஒரு குருட்டு விசுவாசி என்பவன் மாணவனுக்கு நேர் எதிரானவன். ஒரு மாணவர் கேள்விகளை எழுப்பி ஆர்வத்துடன் இருக்கும் வேளையில், ஒரு குருட்டு விசுவாசி தனக்கே உரிய ஒரு மாய உலகில் வாழ்கிறார். அமைப்பு ஒட்டுமொத்த நாட்டையும் தன்வசப்படுத்தியுள்ளது.

அமைப்பு (System) முறை மாணவர்களை கண்டு அச்சுறுத்தலை உணர்கிறது. ஏன்? ஏனெனில் மாணவர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய பிரதேச முதல்வர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:-

அந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து காந்தி உண்மையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். போதுமான தயாரிப்பு ஏதுமின்றி மத்திய பிரதேசத்திற்கு வந்து அவர் தனது நிகழ்ச்சிகளை நடத்திய விதம், அவர் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இது அவரது இயல்புக்கு ஏற்றதாகவே உள்ளது.

காங்கிரஸின் அரசியல் வரலாற்றில், அக்கட்சியின் அரசுகள் நான்கு முதல் ஐந்து தலைமுறைகளாக நாட்டையும் மாநிலங்களையும் ஆட்சி செய்துள்ளன. இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அவரிடம் பதில்கள் இருக்க வேண்டும்.

உதாரணமாக, அவர் கல்வி முறையைப் பற்றிப் பேசினால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் (MCI) படி மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிலை என்னவாக இருந்தது? மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு விமான நிலையத்தை கூட கட்டவில்லை.

இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel