தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா

முதலமைச்சர் விஜய் அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அதனை தொடர்ந்து நேற்று காலை முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது.

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று மேற்கொண்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

* முதலீடுகளில் அரசியல் இருக்கக்கூடாது என நினைத்து நானே சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறினேன்.

* தொழில் முதலீடு தொடர்பாக தினம் தினம் த.வெ.க. அரசு ரீல் விடுகிறது.

* ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

* முதலமைச்சர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே உள்ள மருத்துவமனை அருகே நின்று கத்துகின்றனர்.

* வெளிநாட்டுக்கு சென்று தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்.

* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?

* ரூ.3000 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் பெயரையே சொல்லாதது ஏன்?

* லண்டனில் கார் பந்தயத்தை பார்க்கச் செல்கிறேன் என்றால் யார் என்ன சொல்லப்போகிறார்கள்.

* எஃப்1 கார் பந்தயம் நடத்த 2 ஆயிரம் ஏக்கம் நிலம் தேவை, அதை எந்த இடத்தில் எடுக்கப்போகிறார்கள்?

* உண்மையான தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்?

* ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.

* வெளிநாடுகளில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது, எவ்வளவு முதலீடு என நாள்தோறும் அறிக்கை வெளியிட்டோம்.

* முதலமைச்சர் வெளிநாடு செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பின்பும் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை?

* வெற்றி முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் வெற்று முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள்.

* திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலீடுகளை தாங்கள் கொண்டு வந்ததாக த.வெ.க. அரசு கூறுகிறது.

* திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் உடனுக்குடன் தகவல்களை தந்தோம்.

* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என கூறினார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel