தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவி எஜமானர்களின் கீழ் காவல்துறை? - உதயநிதி கண்டனம்!

ஈரோட்டில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளான செப்.17 அன்று, விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். திராவிடர் கழகம் சார்பில் இந்த பேரணி முன்னெடுக்கப்படும்.

இந்நிலயில் இந்தாண்டு இந்த பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நாளில் இந்து முன்னணியினர் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தை காரணம் காட்டி, ஈரோடு காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது.

இந்த அனுமதி மறுப்பு விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்கஸ் அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார், அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?

காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கீழ் சென்றுவிட்டதா?

பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel