தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அக்கவுண்ட் இல்லாமலும் அழைப்புகளில் இணையலாம் - வாட்ஸ்அப்-இல் வரப்போகும் புது அப்டேட்

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். அவ்வப்போது செயலிகளில் புது அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் விரைவில் புதிதாக "கெஸ்ட் காலிங்" (guest calling) என்ற அம்சத்தினை வழங்க இருக்கிறது.

தற்போது இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்குவதில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம், வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களையும் வாட்ஸ்அப் அழைப்புகளில் சேர அனுமதிக்கும்.

இதன் மூலம், பயனர்கள் செயலியை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அக்கவுண்ட் உருவாக்க தேவையில்லாமல், வெப் பிரவுசர் வழியாக நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

தற்போது, ​​வாட்ஸ்அப் செயலி மற்றும் அக்கவுண்ட் இல்லாத பயனர்களால் வாட்ஸ்அப் அழைப்பில் இணைய முடியாது. இந்த புதிய கெஸ்ட் காலிங் அம்சம் இந்த குறைபாட்டை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வாட்ஸ்அப் விரைவில் அக்கவுண்ட் இல்லாமலேயே பயனர்களை அழைப்புகளில் இணைய அனுமதிக்கலாம்.

இது குறித்து WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களின் படி, வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்கள் பாதுகாப்பான இணைப்பு மூலம் அழைப்புகளில் சேர அனுமதிக்கும் கெஸ்ட் காலிங் அம்சத்தில் வாட்ஸ்அப் பணியாற்றி வருகிறது.

இந்த செயல்பாடு, வாட்ஸ்அப்பின் ஏற்கனவே உள்ள கெஸ்ட் சாட் வழிமுறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது, வாட்ஸ்அப் பயனர்கள் இந்த மெசேஜிங் தளத்தை பயன்படுத்தாத நபர்களை அழைக்க வழிவகுக்கும்.

இந்த அம்சத்தின் மூலம், அழைப்பை ஏற்பவர் 'அழைப்புகள்' (Calls) பகுதியில் இருந்து ஒரு அழைப்பு இணைப்பை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அழைப்பை ஏற்பவர், அழைப்பின் வகையைத் தேர்ந்தெடுத்து, உருவாக்கப்பட்ட இணைப்பை நகலெடுத்து மற்ற பங்கேற்பாளர்களுடன் பகிரலாம். இந்த இணைப்பு, வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) தளத்தில் உள்ள அழைப்பு இடைமுகத்தை திறக்கும் என்று சொல்லப்படுகிறது.

வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாத பயனர்கள், வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்யாமலோ அல்லது கணக்கை உருவாக்காமலோ, வெப் பிரவுசரில் அந்த இணைப்பை திறந்து கெஸ்ட்-ஆக அழைப்பில் இணைய முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel