தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்- சபாநாயகர்

தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாத்தில் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தனர்.

அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

முன்னதாக, தனித்தீர்மானம் மீதான விவாதத்தின் போது திமுக- த.வெ.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel