மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி: கொல்கத்தா ஹவுரா பாலத்தில் விறுவிறுப்பான படப்பிடிப்பு!
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்கும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது கொல்கத்தாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் முதன்முறையாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் முன்னணி நடிகை சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், தனது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பைக் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார். படத்தின் மிக முக்கியமான காட்சிகள் கொல்கத்தாவின் அடையாளமான ஹவுரா பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இவர்களது கூட்டணியில் வெளியாகும் பாடல்கள் எப்போதும் காலத்தைக் கடந்து ரசிக்கப்படுபவை என்பதால், இசைப்பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.
இந்த படத்திற்கு புதிய ரக ட்யூன்களை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே கம்போஸ் செய்து முடித்துள்ளதாகப் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மணிரத்னம் காட்சிகளை விளக்குவதும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் காட்சிகள் அடங்கிய பிரத்யேகப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
இந்த புதிய கூட்டணியின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.