தேர்வு சீர்த்திருத்தம்: இன்போசிஸ் இணை நிறுவனர் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு- பிரதமர் மோடி வீடியோ வெளியீடு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக,

இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நந்தன் நிலேகனி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.

வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.

தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel