POLLING FLAMES

 

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு!

4 years ago 18 ஜனவரி 2022 01:01 AM | views : 249
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் நட்சத்திர ஜோடியான சமந்தா - நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஜோடி பிரிவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து டுவிட்டரில் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18 ஆண்டுகளாக நண்பர்கள், தம்பதி, பெற்றோர் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது எனவும் தற்போது, ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவும், நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம் என்றும் இருவரும் சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம் எனவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். பிரபல ஜோடியான நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே, நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் தனது முதல் கணவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் இந்திய அணி TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் PMK CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் COIMBATORE திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH தேவர் வன்னியர் தமிழ்நாடு AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது அமமுக ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் தென்காசி தீபாவளி வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை மதுரை விடுமுறை திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION CSK கீர்த்தி சுரேஷ் அஜித் தூத்துக்குடி அன்புமணி கள்ளக்காதல் RAJINIKANTH