POLLING FLAMES

 

முதன் முறையாக இந்தி சினிமாவில் நடிகை சமந்தா!

4 years ago 13 அக்டோபர் 2021 06:28 AM | views : 256
நடிகை சமந்தா, இப்போது தெலுங்கு, தமிழில் உருவாகும் ’சாகுந்தலம்’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் பிரிய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி கருத்துத் தெரிவிக்காமல் இருந்த அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் தாங்கள் பிரிவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து பிரிவதற்கான காரணம் இதுதான் என்று ஏராளமான வதந்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் விவாகரத்துக்குப் பிறகு நடிகை சமந்தா, தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ’தி பேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான இந்த தொடர் சர்ச்சையை கிளப்பினாலும் இந்தியில் இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதோடு, நடிகை சமந்தாவின் நடிப்பும் அங்கு கவனிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு சில பாலிவுட் வாய்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில் அவர் முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் கைது தேவர் AJITH தமிழ்நாடு சீமான் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக OPS பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் நெல்லை SURIYA கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி அன்புமணி கள்ளக்காதல் தீபாவளி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH மதுரை அஜித்