POLLING FLAMES

 

முதலமைச்சர் விருப்பப் பட்டியலில் விஜய் 2-வது இடம் - லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு

4 months ago 03 ஜனவரி 2026 08:56 AM | views : 430
2026 சட்டசபைத் தேர்தலில் வென்று மீண்டும் ஸ்டாலினே முதல்வராக பதவியேற்பார் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி விஜய் 2வது இடத்தை பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என்று 4 முனைப்போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் தரப்பில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்துக்கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நகரங்களில் 54.8 சதவிகிதம் பேரிடமும், எஞ்சிய இடங்களில் 45.2 சதவிகிதம் பேரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக்கணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும். 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் படி மீண்டும் ஸ்டாலினே முதல்வராக வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் விஜய் 2வது இடத்தை பிடித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முந்தி விஜய் 2வது இடத்திற்கு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் தமிழகம் INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM கைது தேவர் OPS அமமுக பிரதமர் மோடி வன்னியர் தமிழ்நாடு சீமான் AJITH தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS SURIYA சூர்யா நெல்லை THIRUMAVALAVAN கொரோனா ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை CSK கள்ளக்காதல் தீபாவளி தூத்துக்குடி அஜித் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை அன்புமணி தென்காசி RAJINIKANTH மதுரை திருப்பரங்குன்றம்