Tamil News & POLLING

 

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

5 months ago 08 அக்டோபர் 2025 03:33 PM | views : 143
நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன, டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது, மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர், தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி "மருத்துவப் பயனாளிகள்" என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக அரசு. இதெல்லாம் என்ன பிழைப்பு?

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி "பேச் ஒர்க்" செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI ADMK AIADMK AMMK TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM தமிழகம் PMK கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் பாமக சீமான் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி CONGRESS கொலை EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI COIMBATORE அமமுக சட்டசபை தேர்தல் கோவை PARLIAMENT ELECTION கைது KEERTHY SURESH AJITH TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி திருமாவளவன் OPS THIRUMAVALAVAN விடுமுறை திருநெல்வேலி கள்ளக்காதல் தமிழ்நாடு நெல்லை SEEMAN TAMIL ACTRESS மதுரை கொரோனா ASSEMBLY ELECTIONS நடிகை தேவர் வன்னியர் டாப் நியூஸ் டிரெண்டிங் ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் TAMIL CINEMA SENGOTTAIYAN 2024 T20 WORLDCUP தமிழக அரசு அஜித் THOOTHUKUDI MADURAI ELECTION COMMISSION NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ்