POLLING FLAMES

 

தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி- வாலிபர் கைது

11 months ago 25 மே 2025 08:00 AM | views : 232
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு என செய்தி வந்துள்ளது. அதனை நம்பி மேற்சொன்ன பெண் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங்ஸ் மற்றும் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு லிங்க அனுப்பியுள்ளனர். அந்த லிங்க் மூலம் மேற்படி பெண் ரேட்டிங்ஸ் கொடுத்து முதலில் ரூ.3,670 பணத்தை பெற்றுள்ளார். பின்னர் மேற்சொன்ன மர்ம நபர் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக லாபம் பெறலாம் என அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி மற்றொரு லிங்க் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் வந்த இணையள பக்கத்தில் மொத்தம் ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்து 830 பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் லாபம் வரவில்லை என்று அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் கூடுதலாக பணத்தை கட்டினால்தான் முதலீடு மற்றும் அதற்கான லாப பணத்தை எடுக்க முடியும் என்று வற்புறுத்தியுள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த பெண், இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கன்னியாகுமரி திருப்பரப்பு பள்ளிமுக்கு பகுதியைச் சேர்ந்த மணி மகன் மகேஷ் (வயது 37) மேற்சொன்ன பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சைபர் குற்றப்பிரிவு போலீசார் மகேஷை நேற்று (24.5.2025) கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK பாமக INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் தமிழகம் கோவை CONGRESS EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் கைது பிரதமர் மோடி AJITH தமிழ்நாடு KEERTHY SURESH வன்னியர் OPS அமமுக கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் SURIYA THIRUMAVALAVAN நெல்லை NELLAI ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் மதுரை அன்புமணி கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION தென்காசி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை அஜித் தூத்துக்குடி திருப்பரங்குன்றம் CSK RAJINIKANTH தீபாவளி விடுமுறை