POLLING FLAMES

 

தஞ்சாவூரில் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்த திமுகவினருக்கு அடி உதை...!

4 years ago 13 செப்டம்பர் 2021 01:06 PM | views : 265
’’சிகரெட் கேட்ட போது கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த மன்னார்குடி சேர்ந்த திமுக பிரமுகர்கள், பெட்டிக்கடைக்காரர் பெண்ணின் துப்பட்டாவை பிடி்து இழுத்து தகாத வார்த்தைகள் பேசியவர்களுக்கு அடி உதை’’

தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (48). இவர் மேலவஸ்தாச்சாவடி அருகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் ஐயங்கார் பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மன்னார்குடி நகர திமுக இளைஞர் அணி செயலாளர் சுதாகர் (42), திமுக விவசாய தொழிலாளர் பாண்டவர் (54), மாணவர்கள் நகர துணை செயலாளர் முருகேசன் (48) உள்ளிட்ட 8 பேர் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற விருந்திற்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாலை 4 மணி அளவில், சூரக்கோட்டையிலுள்ள, ஆற்றில் குளித்து விட்டு மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் அமைந்துள்ள ஐயங்கார் டீக்கடையில் டீ குடித்தனர். அப்போது அருகில் இருந்த டீக்கடை நடத்தி வருகின்ற ரேவதியுடம், சிகரெட் கேட்டுள்ளனர். ஆனால் மற்ற வாடிக்கையாளர்கள் இருந்ததால், சிகரெட் கொடுக்க தாமதமானது.



இதனால் ஆத்திரமடைந்த திமுகவை சேர்ந்தவர்கள், ரேவதியை தகாத வார்த்தைகள் பேசி திட்டி, அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினர். இச்செயலை தட்டிக்கேட்ட பேக்கரி உரிமையாளர் ஆனந்தன் அவரது மகன் மட்டும் ஊழியர்களை கடுமையாக தாக்கி அவர் கடையை சூறையாடினர். இச்சம்பவத்தில் பெட்டிக் கடைக்காரரின் மகன் வசந்தன் (24) ஊழியர்கள் திருப்பதி (25), பாஸ்கர் (24) வாடிக்கையாளர் கார்த்திகேயன் (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.



அவர்களை அருகிலுள்ளவர்கள் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சூரக்கோட்டை கிராம மக்கள், அப்பகுதியில் திரண்டு, திமுகவை சேர்ந்த 6 பேரை மடக்கி பிடித்து அடித்து உடைத்து உடைத்தனர். இதில் இருவர்கள் தப்பியோடி காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.



சூரக்கோட்டை மக்கள் அடி உதைத்தில், திமுக பிரமுகர்கள் சுதாகர், முருகேசன், பாண்டவர், இசையரசன் (39) பிரபு (27), சுரேஷ் (32), 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை ரேவதி அளித்த புகாரின் பேரில் திமுக சேர்ந்த 6 பேர் மீதும் , திமுக பிரமுகர் ஆண்டவர் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீதும், தஞ்சை தாலுகா போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK பாமக காங்கிரஸ் தமிழகம் முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கோவை கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக OPS சீமான் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH தமிழ்நாடு பிரதமர் மோடி தேவர் AJITH கைது SURIYA NELLAI நெல்லை THIRUMAVALAVAN ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சூர்யா கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION RAJINIKANTH தீபாவளி பாலியல் தொல்லை அன்புமணி கள்ளக்காதல் தென்காசி CSK வடகிழக்கு பருவமழை அஜித் மதுரை திருப்பரங்குன்றம் விடுமுறை தூத்துக்குடி