Tamil News & POLLING

 

திருமாவளவனை எப்பாடுபட்டாவது முதல்வர் ஆக்குவோம்: சீமான் ஆவேசம்

1 year ago 21 அக்டோபர் 2024 03:25 AM | views : 169
நாமக்கல்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே தங்களின் கனவு என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூகநீதி குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராவார்? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது.

இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது.

எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?

உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அவரை முதல்வராக விடமாட்டீர்கள்?

இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்.

நாங்கள் எப்பாடுபட்டாவது அவரை முதல்வர் ஆக்குவோம் என தெரிவித்தார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AMMK ADMK TTV DHINAKARAN MK STALIN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் டிடிவி தினகரன் TAMIL NADU AIADMK உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் PMK முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழகம் CONGRESS கனமழை பாமக சீமான் இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கொலை பிரதமர் மோடி SEEMAN EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் கோவை KEERTHY SURESH அமமுக தீபாவளி COIMBATORE கைது தென்காசி THIRUMAVALAVAN நெல்லை NELLAI திருமாவளவன் கள்ளக்காதல் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை ஓபிஎஸ் TAMIL ACTRESS AJITH திருநெல்வேலி விடுமுறை தேவர் OPS திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் டிரெண்டிங் MADURAI மழை 2024 T20 WORLDCUP வன்னியர் நாடாளுமன்ற தேர்தல் நடிகை NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் அஜித் வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS தமிழக அரசு ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் THOOTHUKUDI