POLLING FLAMES

 

தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் விக்ரம் விஜய் சேதுபதி!

4 years ago 24 ஆகஸ்ட் 2021 07:40 AM | views : 283
தேவர் மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே.

1992 இல் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம், தேவர் மகன். மலையாள இயக்குனர் பரதன் இதனை இயக்கியிருந்தார். நாசர், காகா ராதாகிருஷ்ணன், ரேவதி, கௌதமி, தலைவாசல் விஜய், வடிவேலு உள்பட ஏராளமானோர் இதில் நடித்திருந்தனர். சிவாஜியின் யதார்த்த நடிப்பின் மகுடம் தேவர் மகன். கமலே இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.


அச்சு அசலான தமிழக கிராமத்து வாழ்வியலைச் சொன்ன படம். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும், நாயகனாக விக்ரமும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே கமலின் தயாரிப்பில் (விக்ரம் - கடாரம் கொண்டான், விஜய் சேதுபதி - விக்ரம்) நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தேவர் மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே. தேவர் மகனின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் முக்கிய காரணங்களாக இருந்தன. அவர்கள் தேவர் மகன் 2 படத்தில் பணிபுரிய அதிக வாய்ப்புள்ளது.

தேவர் மகன் இரண்டாம் பாகம் குறித்து மலையாள தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கமல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தேவர் மகன் 2 உருவாவது நிச்சயம் என்கிறார்கள். தேவர் மகனில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே பாடல், தமிழக கிராமங்களில் ஆதிக்க சாதியினரின் விருப்பப் பாடலாகி தலித்துகள் அதனை பாட நிர்ப்பந்திக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. சாதி மோதல்களுக்கும் இந்தப் படமும், குறிப்பிட்ட பாடலும் காரணமாக அமைந்தன. அப்படியான அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில் தேவர் மகன் 2 உருவாவது நல்லது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி AIADMK கனமழை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN PMK காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக கோவை அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM CONGRESS தமிழகம் PARLIAMENT ELECTION கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு KEERTHY SURESH கைது அமமுக பிரதமர் மோடி தேவர் வன்னியர் OPS AJITH சீமான் நெல்லை TAMIL ACTRESS கொரோனா SURIYA தமிழக சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் அன்புமணி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் மதுரை தீபாவளி விடுமுறை கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH வடகிழக்கு பருவமழை CSK நடிகை பாலியல் தொல்லை தென்காசி தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல்