நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு!

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சூழலில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஏற்கெனவே அறிவித்தபடி இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கிட்டுவை எதிர்த்து திமுகவின் அதிருப்தி கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இதில் கிட்டு 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதையடுத்து நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel