POLLING FLAMES

 

தமிழக பட்ஜெட் 2021 நிதி ஒதுக்கீடு

4 years ago 13 ஆகஸ்ட் 2021 07:09 AM | views : 254

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ₨5 கோடி நிதி ஒதுக்கப்படும்

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்

உலகப் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ₨4807.56 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ₨405.13 கோடி ஒதுக்கீடு

காவல் துறையில் உள்ள 14,317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

நீதித்துறை நிர்வாகத்திற்கு ₨1,713.30 கோடி ஒதுக்கீடு

உணவு மானியத்திற்கான நிதி ₨8,437.57 கோடியாக உயர்வு

மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

மாநில பேரிடர் நிவாரணம் மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்

பெண்கள்-குழந்தைகள் மீதான குற்றங்கள், இணையவழி, பொருளாதார குற்றங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்

மீனவர்கள் நலனுக்காக ₨1,149.79 கோடி ஒதுக்கீடு



பாசனத்திற்காக ₨6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது



முதலமைச்சர் தலைமையில் ₨500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்



அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்



சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடித்துறைமுகம் திட்டம் ₨150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்



தூய்மை பாரத இயக்கம் ₨400 கோடி செலவில் செயல்படுத்தப்படும்



தமிழ்நாட்டில் ஈரநிலங்களின் சூழலியலை மேம்படுத்த, முதலமைச்சர் தலைமையில் 'தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்' அமைக்கப்படும்



2021-22ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ₨111.24 கோடி நிதி ஒதுக்கீடு



சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்



சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ₨3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்



கலைஞர் நகர்ப்புற மேம்பாடு என்ற புதிய திட்டத்திற்கு ₨1,000 கோடி ஒதுக்கீடு



ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்



சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ₨2,371 கோடி ஒதுக்கீடு



நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்



தமிழக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் உதவியுடன் சிறப்பு கோவிட் கடன் ₨5,500 கோடி உட்பட ₨20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்



நெடுஞ்சாலைத்துறைக்கு ₨17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு



பள்ளிக்கல்வி துறைக்கு ₨32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு





உயர்கல்விக்காக ₨5,369.09 கோடி ஒதுக்கீடு








விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ₨19,872.77 கோடி ஒதுக்கீடு





2,500 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளித்து வருகிறது மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM கோவை முக ஸ்டாலின் COIMBATORE கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக வன்னியர் சீமான் தமிழ்நாடு தேவர் OPS TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை NELLAI கொரோனா சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கைது SURIYA THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH தீபாவளி சூர்யா ஓபிஎஸ் மதுரை விடுமுறை கள்ளக்காதல் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK அன்புமணி கீர்த்தி சுரேஷ்