தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ராமாயணா படத்தின் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடலின் தமிழ் பதிப்பு வெளியானது!

இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளப் படம் ‘ராமாயணா’.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராமனாக பாலிவுட் ஸ்டார் ரன்பீர் கபூரும், ராவணனாக கன்னட நடிகர் யாஷ், சீதையாக சாய்பல்லவி, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம், இந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவ.6ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’-இன் தமிழ் பதிப்பு இன்று வெளியாகி உள்ளது.

இந்து புராணத்தை மையாக கொண்டு உருவாகுவதால் இப்படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் இந்து பண்டிகை நாட்களிலேயே வெளியாகின்றன.

முன்னதாக பிரம்ம முகூர்த்ததில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியன்று இப்பாடலின் இந்தி பதிப்பு வெளியானது.

இந்நிலையில் இன்று தமிழ் பதிப்பு வெளியாகி உள்ளது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள தமிழ் வரிகளுக்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசைகொடுக்க, பாடகி சின்மயி, ஹரிசரன் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel