தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பிரிக்ஸ் மாநாடு: இந்தியா வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் இந்திய வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் பிராதமர் பெசெஸ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் வந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தடைந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

நேற்று ரஷிய அதிபர் புதின் உடன் இந்திய பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதினிடம் உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர். அத்துடன் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel