தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜாவா பைக்கின் விலை இந்திய சந்தையில் ரூ. 1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன், பேட்டில் கிரீன், நெபுலா ப்ளூ, மாஸ் கிரே, ஐவரி மற்றும் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

இவற்றில் பிளாக் நிற வேரியண்ட் மிக விலை உயர்ந்தது, இதன் விலை ரூ. 1.90 லட்சம் ஆகும். இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், சாதாரண பைக் மாடல்களில் இருந்து தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறது.

இயந்திரவியல் ரீதியாக, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் வழக்கமான மாடலை போன்றதே ஆகும். இதிலும் 294சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7,950 ஆர்.பி.எம்-இல் 26.9 ஹெச்.பி. பவர் மற்றும், 6,000 ஆர்.பி.எம்-இல் 26.8 நியூட்டன் மீட்டர் டார்க் உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பைக்கின் பாடிவொர்க்கின் கீழ், 35mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்ட டபுள் கிராடில் ஃபிரேம் உள்ளது. இந்த பைக், 18-இன்ச் முன்புற மற்றும் 17-இன்ச் பின்புற சக்கரங்களில் இயங்குகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 280mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளன.

போட்டியைப் பொறுத்தவரை, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், ராயல் என்ஃபீல்ட் மீட்டியோர் 350 மற்றும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel