தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்து உள்ளன.

கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே மத்திய மந்திரி சபையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கவர்னர் நியமனம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.

பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு, நாடு திரும்பிய பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel