நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர்.. லண்டனில் இந்திய மாணவி கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை

இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த பஞ்சாபை சேர்ந்த மாணவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்த கிரந்தீப் கவுர் என்ற 24 வயது இளம்பெண், 2 வருடம் முன்பு மாணவர் விசாவில் இங்கிலாந்து சென்றுள்ளார்.

படிப்பை முடித்த அவர், லண்டனின் ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஞாயிறு காலை கிரந்தீப் கவுர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.

பின்னர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து கிரந்தீப்பின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிரந்தீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் போலீசார் கிரந்தீப்பின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

கொலைக்கு பிறகு குற்றவாளி கையில் கத்தியுடன் வீட்டின் வாசலைக் கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் லண்டன் போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவர் இங்கிலாந்தை சேர்ந்த 44 வயதான டேனியல் சீன் ஜேம்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தகவலின்படி, லண்டனில் 20 வயது இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்திவிட்டு கொள்ள போலீசாரிடமிருந்து தப்பித்து ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள கிரந்தீப் கவுரின் வீட்டிற்குள் டேனியல் நுழைந்துள்ளார்.

அங்கே கிரந்தீப்பைக் கண்டதும், தன்னை போலீசில் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரைத் கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

கொலையாளி டேனியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிரந்தீப்பின் தந்தை சுக்தேவ் சிங் மற்றும் தாய் பால்ஜித் கவுர் தங்களது நிலத்தை விற்று, மகளை லண்டனில் படிக்க வைப்பதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர். தற்போது மகளின் மரணச் செய்தி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கள் மகளின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசுக்கு அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel