ரெனால்ட் கிவிட் - ரூ.4.52 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகம்
ரெனால்ட் இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் க்விட் காரை இன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக்கின் ஆரம்ப விலை ரூ.4.52 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5.60 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூமில் விற்பனையாகிறது.
ரெனால்ட் க்விட்டின் என்ஞ்சின் 67 bhp மற்றும் 91 Nm ஆற்றலை உருவாக்கும் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த வாகனத்தில் முன்பக்கம் இரண்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷனுடன் கூடிய ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 17 நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளமைப்பை பொறுத்தவரை Apple CarPlay மற்றும் Android Auto உடன் இணக்கமான 8-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, முழுமையான டிஜிட்டல் LED இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் டைனமிக் வழிகாட்டுதல்களுடன் கூடிய பின்புறக் காட்சி கேமரா, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ் மற்றும் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு ரெனால்ட் க்விட், எவல்யூஷன் மற்றும் கிளைம்பர் என இரண்டு வகையான வேரியண்ட்களில் வெளியாகி உள்ளது.
எவல்யூஷன் வேரியண்ட்டின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அடிப்படை மாடல் விலை ரூ.4.52 லட்சமாகவும், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலின் விலை ரூ.4.89 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிளைம்பர் டிரிம் மேனுவல் மாடலுக்கு ரூ.5.14 லட்சமாகவும் மற்றும் AMT மாடலின் விலை ரூ.5.60 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ரெனால்ட் நிறுவனம் கிளைம்பர் மேனுவல் வேரியண்ட்டிற்கு மட்டும் நேரடியாக ரூ.15,000 ஆஃபர் அறிவித்துள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் தளம் வழியாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4.99 லட்சத்தில் வாகனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.