61 வயதில் 3-வது முறையாக திருமணம் செய்யும் அமீர் கான்!
பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கும் அவரது லிவ் பாட்னர் காதலியான கௌரி ஸ்ப்ராட்டுக்கும் நாளை மறுநாள் (ஜூலை 5ம் தேதி) திருமணம் நடைபெறவுள்ளது.
ராஜ்குமார் ஹிரானியின் 'ப்ரிதம் அண்ட் பெட்ரோ' தொடரின் திரையிடல் நிகழ்ச்சியில், ஆமிர் கான் தன்னுடைய மகன் ஜுனைத் கானுடன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமீர் கான், கௌரி ஸ்ப்ராட்டுடனான தனது திருமணத்தை உறுதி செய்தார். ஜூலை 5ம் தேதி மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் திருமணம் நடைபெறும் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில் இந்த திருமணம் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பட்ட நிகழ்வாக வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்றார். இந்த ஜோடியை ஆசிர்வதித்து வாழ்த்திடுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நடக்கவிருக்கும் இந்த திருமண விழாவில், அமீர் கானின் முதல் மனைவி ரீனா தத்தாவுடனான திருமணத்தின் மூலம் பிறந்த நடிகர் ஜுனைத் கானும், திரைப்பட இயக்குநர் கிரண் ராவுடனான இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த மகன் ஆசாத்தும் மற்றும் கௌரி ஸ்ப்ராட்டின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகனும் பங்குபெறவுள்ளனர்.
61 வயதான அமீர் கான், கடந்த ஆண்டு தனது 60-வது பிறந்தநாள் விழாவில் கௌரி ஸ்ப்ராட்டை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார். இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் இருந்து வருவதுடன், கடந்த ஓர் ஆண்டாக குடும்பமாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது பதிவுத் திருமணம் செய்ய உள்ளனர்.