ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகர் கே.பாக்யராஜ்!

ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகர் கே.பாக்யராஜ்!

  ஆகஸ்ட் 26, 2022 | 01:42 pm  |   views : 1925


அதிமுகவை காப்பாற்றமும் எம்ஜிஆரின் பெயரை காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னால் ஆன முயற்சியை செய்திருக்கிறேன் என்று கே.பாக்யராஜ் கூறியுள்ளார். அனைவரும் ஒன்று பட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று மயிலாப்பூரில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.



அதிமுக பொதுக்குழு விவகாரம் சூடுபிடித்துள்ளது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது டிடிவி தினகரன், சசிகலா என அனைவரும் அதிமுக என்ற ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.


ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பை நிராகரித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.



அதிமுகவின் பெரும்பான்மை தொண்டர்கள், மக்கள் என்ன நினைக்கிறார்களே அதை பிரதிபலிக்க வேண்டும். கட்சியில் எந்தவேலையும் செய்ய மாட்டார் ஆனால் எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பார் ஓ.பன்னீர் செல்வம். எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி அழைப்பு விடுப்பார். தானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டு.




Also read...  பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

கட்சியில் உயர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அநாகரீகமான முறையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி இணைய முடியும். அதிமுகவை தன்வசப்படுத்த நினைப்பவர்களுடன் ஒருபோதும் இணைய முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.



இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் சென்னை ராயப்பேட்டையில் தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.



நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இன்று தனியார் விடுதிக்கு சென்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். சந்திப்புக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுக தொண்டர்களும், எம்ஜிஆர் ரசிகர்களும் புத்துணர்ச்சி பெறும் அளவிற்கு இந்த கட்சி பலம் பெறும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இந்த கட்சியை எப்படி விட்டு விட்டு சென்றார்களோ, அதே போல அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.



அதிமுக நிறுவனர் தலைவர் எம்ஜிஆர் உடல் நலமில்லாமல் இருந்த போது அரசியல் மேடைகளில் பேசியுள்ளேன். இப்போது அவருடைய பேரை காப்பாற்றவும், கட்சியைக் காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னாலான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்துவார்கள். அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படுவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசுவேன். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என்று பாக்யராஜ் கூறினார்.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 55 minutes ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்


பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

2024-05-14 17:02:39 - 14 hours ago

பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..? தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய


கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2024-05-14 15:19:11 - 15 hours ago

கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.


ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன்

2024-05-13 12:32:23 - 1 day ago

ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-ஜெயக்குமாரின் உடலில் 15 செ.மீ-50 செ.மீ. அளவு கடப்பா கல், கம்பியுடன் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிரஷ் வாயில் இருந்தது. ஜெயக்குமாரை காணவில்லை என 3-ம் தேதி புகார் வந்தது; அன்று இரவு 9


ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார் மீது 3 நாட்களில் நடவடிக்கை - மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

2024-05-13 12:29:42 - 1 day ago

ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார் மீது 3 நாட்களில் நடவடிக்கை - மகளிர் ஆணையம் வலியுறுத்தல் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்!

2024-05-10 07:15:35 - 5 days ago

கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்! கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் 9 பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும், காய்ச்சல் குணமாகவில்லை. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில்


சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

2024-05-09 06:12:32 - 6 days ago

சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள் சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்


ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

2024-05-09 05:59:23 - 6 days ago

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்